கோயம்புத்தூர் ஆகஸ்ட், 16
கோயம்புத்தூர் சுதந்திரதினத்தையொட்டி எஸ்டிபிஐ. கட்சி சார்பில் கோவை உக்கடம் ஜிஎம்நகரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட் டது.
பின்னர் அந்த கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசிய கொடியு டன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் சுதந் திர தினத்தை போற்றும் வகையில் முழக்கமிட்டனர். இதில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.