கோயம்புத்தூர் ஆகஸ்ட், 14
மரக்கன்றுகள் நடும் திட்டம் கோவை மாநகராட்சியில் அடர்வனக் காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்ப்புற ஊராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் கியூஆர் கோடு மூலம் புகார் தெரிவிக்கும் முறை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடமாடும் நூலகத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவைக்கு 12 முதல் 15 மாதங்களில் ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும். அதில் முதல்கட்டமாக ரூ.500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்