மே, 18
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறையும் அதனை சரி செய்ய அதிக அளவில் நீர் அருந்துதல் இளநீர் மோர் அருந்துதல் ஆகியவற்றை செய்யலாம். நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். அதே நேரம் அதிக காரம், எண்ணெய் உணவுகளை கோடையில் தவிர்ப்பது நல்லது. பழங்கள் நிறைய சாப்பிடலாம்.