கீழக்கரை மே, 12
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தாராக இருந்த சரவணனுக்கு பதிலாக பழனிக்குமார் நியமிக்கப்பட்டு இன்று தாசில்தார் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக இடம் மாறுதலில் செல்லும் தாசில்தார் சரவணனுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்ட பழனிக்குமார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
மேலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தாசில்தார் பழனிக்குமார் அவர்களுக்கு வணக்கம் பாரதம் இதழ் சார்பில் நமது செய்தியாளர் சால்வை அணிவித்து வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.