சென்னை மே, 10
புயல் நகர்வு காரணமாக தமிழகத்தில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மோக்கா புயல் நகர்வு காரணமாகவும், தரைக்காற்று திசை மாறுபாடு காரணமாகவும் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து 16 டிகிரி பாரன்ஹீட் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும்.