சென்னை ஆகஸ்ட், 15
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார்.