Spread the love

மே, 7

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.

மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது.

மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் விளியாகும்.

மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக் அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.

மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்து களியாகக் கிண்டியோ, சதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மீது போடுவதால் அது பழுத்து உடையும்.

மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும்.

முகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வராமல் தடுக்கவும், முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *