மே, 3
பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3 ம் தேதி பத்திரிக்கை சுதந்திர சுதந்திரத்தை நினைவுபடுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் ஜனநாயகத்தின் நான்காம் தூணாய், இயற்கை சீரழிவிவிலும், சமூக போராட்டங்களிலும் மக்களின் தோழனாய் சமூக அக்கறையோடு அநீதிகளுக்கு எதிராக மக்களிடம் நீதமாக செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் முன்னணியில் நிற்கும் அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் அவர்களது பணிசிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், உலக பத்திரிக்கை சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் அடக்குமுறையால் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவதும், மக்கள் விரோத ஆட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நேர்மையான எண்ணற்ற பத்திரிக்கையாளர்களை அடக்குமுறையால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய அடக்குமுறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எனவே, ஜனநாயகத்தின் பாதுகாவலனாக இருக்கும் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட இந்நாளில் நாம் உறுதி ஏற்போம்.
பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் பாரதம் சார்பாக
வாழ்த்துக்கள்!!