சென்னை ஏப்ரல், 5
வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.
இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு துவங்கி நண்பகல் 12:30 மணிவரையிலும், மாலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்களிடம், அர்ச்சனை ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதமும் வழங்கப்படும்.
வட பழனி கோவிலில் பங்குனி உத்திரம் தொடங்கியது. அதனால் நேரம் அறிவிப்பு இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடக்கிறது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரத்துடன் வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது. மேலும் பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றனர்.