ராமநாதபுரம் மார்ச், 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரமலான் மாதத்தை ஒட்டி ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் குடும்பத்திற்காக தலா ரூபாய் 1500 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 100 குடும்பத்திற்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. தமுமுக மாநில துணை பொது செயலாளர் ஆலோசனையில் ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே எக்கக்குடி, கொத்தங்குளம், ஜமாத் தலைவர் ஃபெரோஸ் கான், முகமது அலாவுதீன் ஆகியோருடன் நோன்பு கஞ்சி அரிசி 300 கிலோ வழங்கப்பட்டது.