Spread the love

கடலூர் மார்ச், 15

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளது. எனவே இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *