துபாய் மார்ச், 14
ஐக்கிய அரபு அமீரக துபாயில் நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s சார்பாக மகளிர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்த தனித்திறமையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை வரவழைத்து மேடையில் ஏற்றி அவர்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி அவர்கள் அனைவருக்கும் நிறுவனர் ஆர்ஜே சாரா சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர்கள் சோனா ராம், பி.எம் குரூப் டாக்டர் கனகராஜா மற்றும் ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கே.வி.எல் ரேடியோ கில்லி சிஇஓ முக்தார், கல்ப் நியூஸ் யூசுப், ஆஸ்கர் அலி, எமிரேட்ஸ் அப்துல்லா கனி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் நாளிதழின் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக Spread Smile’s நிறுவனர் ஆர்ஜே சாரா அனைவருக்கும் இரவு விருந்து உபசரித்து நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.