கீழக்கரை மார்ச், 06
கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது அனஸ் இவர் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களுக்கு சென்று முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தவர்.
இதே போல் இவரது தங்கை பாத்திமா தசீபா ஆறாம் வகுப்பு படிக்கிறார். சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் புத்தக திருவிழாவுக்கு சென்று அறிவார்ந்த நூல்களை விலைக்கு வாங்கி ராமநாதபுரம் கிளை சிறைக்கைதிகளுக்கான நூலகத்திற்கு அன்பளிப்பு செய்து அவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தார்.
இந்த இரண்டு இளம் சிறார்களையும் பாராட்டி இளம் சமூக ஆர்வலர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருப்புல்லாணி வட்டார தலைமை மருத்துவர் ராசிக்தீன் கேடயம் வழங்கி பாராட்டினார். பள்ளி தாளாளர் முகம்மது சுஐபு, முன்னாள் தாளாளர் சாதிக், தலைமையாசிரியர் முஹம்மது மீரா, ஆசிரியர் செய்யது அபுதாஹிர், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு “இளம் சமூக ஆர்வலர்” விருது பெற்ற மாணவர் மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.