கீழக்கரை மார்ச், 04
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நகர்மன்ற தலைவருக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
19 வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் தலைமையில் நகர் துணை செயலர்கள் முனீஸ்வரன், மூர் ஜெய்னுதீன், நகர் பொருளாளர் சித்தீக், மாவட்ட பிரதிநிதி தௌபீக்ராஜா, முர்சித், கெஜேந்திரன், சங்கர் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகராட்சி பொறியாளர் பொறுப்பு அலுவலர் சாம்பசிவம் நகர்மன்ற தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நகர்மன்ற தலைவருக்கு வணக்கம் பாரதம் இதழ் சார்பில் மென்மேலும் அவரது பணிகள் சிறப்புற தொடர நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.