கீழக்கரை மார்ச், 04
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஜ்மஉல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டுதல் முகாம் இன்று காலை 10 மணிக்கு பிரபுக்கள் தெருவில் துவங்கியது.
கீழக்கரை 18வது வார்டு SDPI கட்சி நகர்மன்ற உறுப்பினர் சக்கினா பேகம் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் மகளிர் நல உறுப்பினர் முபீனா மஜ்மஉல் ஹைராத்தியா நிர்வாகிகள் ஐக்கிய நல கூட்டமைப்பு இளைஞர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை செய்தனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.