கீழக்கரை மார்ச், 03
நேற்று பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்தார்.
அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்து தரவும் கூடுதல் மருத்துவர், செவிலியர், பணியாளர்களை நியமிக்க கோரியும், புதுகிழக்குத்தெரு பழைய உரக்கிடங்கில் சகல வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க போதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விரைவில் அதற்கான ஆவன செய்வதாக அமைச்சர் உறுதியளித்ததாக தெரிகிறது.
அமைச்சருடனான சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா(எ)முத்துராமலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள், கீழக்கரை மாணவரணி தலைவர் இஃப்திகார் ஹசன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.