கீழக்கரை மார்ச், 02
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு அருகில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார மையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இதுகுறித்து கீழக்கரை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இதுகுறித்து வணக்கம் பாரதம் இதழில் விரிவாக எழுதி இருந்தோம். இன்று மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா துணைத்தலைவர் ஹமீது சுல்தான், திருப்புல்லாணி வட்டார மருத்துவ அதிகாரி ராசிக்தீன், கவுன்சிலர்கள் சித்தீக், பைரோஸ் பாத்திமா, தாஜுன் அலிமா,சூர்யகலா,காயத்திரி,பயாசுதீன், பாதுஷா மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.