ஏர்வாடி மார்ச், 06
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகில் உள்ள ராஜாக்கள் பாளையத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
ஜமாத் தலைவர் மீரா முகைதீன் தலைமையில் மலேசிய தொழிலதிபர் வாணி டத்தோ முகம்மது சாலிபு பள்ளியை கட்டி கொடுத்து திறந்து வைத்தார்.
மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுதீன் ஆலிம்,தொண்டி ஷேக் நிளாமுதீன் ஆலிம்,முஸ்தபா ரஷாதி ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில பொதுசெயலாளர் பாளை ரபீக் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட நகர் மன்ற தலைவர் நவஜோதி பிரவீன்குமார் பள்ளிவாசலுக்கு தனது சொந்த செலவில் சுற்று சாலை அமைத்து கொடுத்து கலந்து கொண்டது சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாய் இருந்தது.
விழாவில் ஐமுமுக மாநில செயலாளர் அன்வர் அலி, மாவட்ட தலைவர் பாகிர் அலி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது சிராஜுதீன், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக்தாவூது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக பள்ளியை அழகுற அமைத்துக்கொடுத்த அர்பன் ஹெரிடேஜ் பொறியாளர்கள் பைசல் ரஹ்மான், கியாதுதீன், கீழக்கரை பஷீர் அகமது ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் சுற்று வட்டார அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்து சமுதாய மக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாய் இருப்பது சிறப்பாகும்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.