கீழக்கரை மார்ச், 01
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் முறையானதொரு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லையென்பது இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கவலையாகும்.
தற்போது காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த தனியாருக்கு சொந்தமான பழைய வீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
தினமும் 50க்கும் மேற்பட்ட பெண்களும் கர்ப்பிணிகளும் வந்து போக மிகுந்த சிரமம் ஏற்படுவதால் சகல வசதிகளும் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தரப்பட வேண்டுமென்னும் மக்களின் கோரிக்கையை ஏற்று 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சி அலுவலகம் அருகில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடப்பணிகள் முழுமைப்பெற்று இன்று திறப்பார்கள் நாளை திறப்பார்கள் என்று காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.
இதற்கிடையில் புதுகிழக்குத்தெரு பகுதியில் உள்ள பழைய உரக்கிடங்கு இடத்தில் சகல வசதிகளுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது?
இந்த பணிகள் துவங்கி பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்?என்பதால் அதுவரைக்கும் தற்போதைய புதிய கட்டிடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.
இதற்காக கீழக்கரை சமூக நல ஆர்வலர் பாசித் இல்யாஸ்,SDPI கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.