ராமநாதபுரம் பிப், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் செயல்பட்டுவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) உறுப்பினர்களுக்கான அரசு மருத்துவ காப்பீட்டு மற்றும் பொது சட்ட விழிப்புணர்வு முகாம் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லா தர்ஹாவில் இருக்கும் ஜகாத் கமிட்டி அலுவலகத்தில் ஜகாத் கமிட்டியின் முதன்மை ஆலோசகர் ககு அப்துல் ஜப்பார் தலைமையில் தலைவர், துணை தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்முகாமிற்கு மருத்துவ காப்பீட்டின் செயல்பாடுகள், பயன்கள் மற்றும் எடுக்கும் முறைகள் பற்றி தமிழ்நாடு கட்டுமானப்பனி தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் டாக்டர் சித்திக் விளக்கினார். மேலும் இன்றய சூழ்நிலையில் அனைவருக்கும் தேவையான பொதுவான சட்டவிழிப்புணர்வு பற்றி உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ஜகாத் கமிட்டியின் சட்ட ஆலோசகருமான ஸாலிஹ் ஹுசைன் விளக்கினார்.
இம்முகாமில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் சாலைத்தெருவை சேர்ந்த MRF மாணவ அமைப்பினர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவவிக்கப்பட்டது.
மேலும் சட்ட ஆலோசகர் சாலிஹ் ஹுசைன், முனைவர் சித்திக் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவித்து கெரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வருக்கை தந்த அனைவருக்கும்,மேலும் ஓடைகரை பள்ளி வாசல் ஜமாத் தலைவர் SM யூசுப் சாஹிப் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.