ராமநாதபுரம் பிப், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 44 வது ஆண்டு விழா மற்றும் மழலைப் LKG & UKG பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா
இஸ்லாமிய பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த தாளாளர் என்ற பட்டம் பெற்ற எம்எம்கே முகைதீன் இப்ராகிம் தலைமையில் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், துணை முதல்வர் லினி மோல் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக முஹம்மது சதக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அலாவுதீன் கலந்துகொண்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார். மேலும் விருந்தினர்களாக நகராட்சி கவுன்சிலர் MMK காசிம், ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் சம்சுல் கபீர், முன்னாள் தலைவர் சுந்தரம்(அப்பா மெடிக்கல்), அமீரகத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருபவரும் தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் அமீரக முதன்மை நிருபரும் மற்றும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பள்ளியின் தாளாளர் கௌரவித்தார்.
இவ்விழாவில் கடந்த புத்தக திருவிழாவில் சிறந்த நடனத்திற்காக மாவட்ட ஆட்சியரிடம் முதல் பரிசு பெற்ற மாணவிகளின் நடனங்களும், இயற்கையின் அவசியம் பற்றி அழகாக காட்சிகளாக நடித்துக் காட்டிய மாணவர்களின் நடிப்பும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்களும் நடைபெற்றன. மேலும் மாணவ மாணவிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் பள்ளியின் தாளாளரை கௌரவப்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்களும் பார்வையாளர்களாக வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.