கீழக்கரை பிப், 11
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 57வது ஆண்டு விழா முகம்மது சதக் ஹமீது மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ராஜம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை நல்லம்மாள் வரவேற்புரையாற்ற உதவி தலைமையாசிரியை லதா ஜாக்குலின் பெக்டஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
மேலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE உமர் வாழ்த்துரை வழங்கினார். மாணவிகளுக்கு ஹாரிதா உமர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாணவிகள், முன்னாள் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.