அமெரிக்கா பிப், 8
அமெரிக்காவில் ஒருவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. பவர் பால் இணையதள லாட்டரி ட்ராவில் சுமார் 6,100 கோடி வென்றுள்ளார். இந்த தொகை வெற்றியாளருக்கு தவணை முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு, மீதமுள்ள தொகை வெற்றி பெற்றதில் இருந்து 29 ஆண்டுகள் வரை படிப்படியாக வழங்கப்படுமாம். மேலும் ஒரே நேரத்தில் 3800 கோடி மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.