சென்னை பிப், 7
மீன்வளத் துறையில் அறிவிக்கப்பட்ட 24 சார்பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 4,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1,156 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://www.tnpsc.gov.in/இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.