சென்னை பிப், 1
அரசு பள்ளிகளில் மாணாக்கர்களை வேறுபணியில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிகளுக்கு வருகின்றனர். அவர்களை கல்விக்குத் தவிர வேறு விதங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என அவர் தெரிவித்தார். சமீபத்தில் தேனியில் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.