மும்பை பிப், 7
ஹிண்டன் பார்க் அறிக்கையால் அதானி குடும்பத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளுக்கு எதிரான கடன்கள் முழுமையாக திரும்ப செலுத்த அதானி குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 1,114 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதானி குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.