சென்னை பிப், 7
2023 ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விற்பனை 14% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 16 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கிராமப்புற பொருளாதாரத்தில் வாகனங்களின் தேவை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.