நாமக்கல் ஆகஸ்ட், 13
கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் பதவியில் இருக்கும் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடக்கிறது. இவரது நெருங்கிய நபர்களான மயில்சுந்தரம், சேகர் வீடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.