ராமநாதபுரம் பிப், 5
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சாலைத் தெரு MRF அசோசியேஷன் என்ற பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய பொதுமக்களுக்கான அரசு சார்ந்த டிஜிட்டல் பொது சேவைக்கான மாபெரும் சிறப்பு முகாம் சாலைத்தெரு 18 வாலிபர்கள் ஷஹீது ஒலியுல்லா தர்கா வளாகத்தில் உள்ள 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை அலுவகத்தில் நடைபெற்றது,
இம்முகாமில் 600 மேற்பட்ட பொதுமக்கள் மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர், இம்முகாமில் முதியோர் உதவி தொகை, விதவை உதவித் தொகை மற்றும் ஆதார் அட்டை, PAN CARD போன்ற ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறபெற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமை ஜகாத் கமிட்டி முதன்மை நிர்வாகி அப்துல் ஜப்பார் தொடங்க வைத்தார்.
மேலும் MRF அசோசியேசன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அமைப்பு மூலமாக தொடர்ந்து இதுபோன்று பல பொது சேவைகள் செய்து வருவது பொது மக்கள் அனைவரிடமும் பாராட்டுகள் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக இம்முகாமிற்கு ஆதரவு தந்த ஜமாத் தலைவர் யூசுப் சாஹிப், சாலைத்தெரு ஜகாத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் MRF அசோசியேஷன் பாஹிர் நன்றி கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.