ஆகஸ்ட், 13
தமிழ் திரையுலகில் ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார்.
தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான ‘ஆரோகணம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து இவர் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ மற்றும் ‘ஹவுஸ் ஓனர்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். இப்படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.