அசாம் பிப், 1
ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அசாமில் முதல் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. பிப்ரவரி 2,3, 7, 8 ஆகிய தேதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெறும். முதல் நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டங்கள் 2 மற்றும் மூன்று ஆகிய தேதிகளில் நடைபெறும். ஜி20 மற்றும் நட்பு நாடுகள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். அதன்பின் 7, 8 ஆகிய தேதிகளில் யூத் 20 என்ற அமைப்பில் கூட்டங்கள் நடத்தப்படும்.