ராமநாதபுரம் ஜன, 28
ராமநாதபுரம், ரெகுநாதபுரம் கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் உவர்நீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. கடல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் செஸ்சேரபியா பயிற்சி அளித்தார். மனித முக்கியத்துவம் வாய்ந்த மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பது இனப்பெருக்கம் தீவனம் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.