ராமநாதபுரம் ஜன, 30
ராமநாதபுரம் மாவட்ட கம்பன் கழகம் நடத்திய கவியரங்கம் திறந்த வெளி அரங்கத்தில் பொதுசெயலாளர் கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தமிழரசி உதயக்குமார் முன்னிலையில் பரமேஸ்வரி தமிழ்வாணன் வரவேற்றார்.
கம்பனின் பார்வையில் ஆன்மீகம்.. தலைப்பில் மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் கவிதா கதிரேசன்,தொண்டு- கலைவாணி,பண்பாடு- மாணிக்கவாசகம்,அறம்-தேவி உலகராஜ்,மறம்-கு.ரா,நட்பு-அப்துல்மாலிக்,அரசியல்-மணிவண்ணன் போன்ற கவிஞர்கள் கவியரங்கத்தில் கலந்து கொண்டு தங்களின் கவித்திறமையை வெளிப்படுத்தினர்.
கம்பன் கழக தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் சிறப்புரையாற்றினர்.
இளமதி பானுகோபன் நன்றி கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவிஞர்கள் கம்பன் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.