கீழக்கரை ஜன, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணார் தெருவில் அமைந்துள்ள சலவை தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சுமார் 15 வருடங்களுக்கு மேல் இந்த கோவில் போதிய பராமரிப்பு இல்லாததால் வழிபாடு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் புதுப்பொலிவுடன் மீண்டும் கோவில் எடுத்துக்கட்டப்பட்டு சிறப்பான முறையில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெற்ற இவ்விழாவில் கிராம பொதுமக்களும் சான்றோர்களும் இறை அன்பர்களும் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. இரவு பாட்டுக்கச்சேரி நடைபெற்று கொண்டாட்டத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றது.