உக்ரைன் ஜன, 26
உக்கரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் பலர் நாட்டை விட்டு வெளியேறி வரும் வேளையில் சில தன்னார்வ உதவியாளர்களும் உக்கிரைனுக்கு சென்று மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் உக்கரைன் மக்களுக்கு உதவி செய்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த இரு தன்னார்வலர்கள் தற்போது போரில் சிக்கி இறந்துள்ளனர். இதை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை உக்கிரேனில் இருக்கும் இங்கிலாந்து நாட்டினரை வெளியேற உத்தரவிட்டுள்ளது.