கீழக்கரை ஜன, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்ப்பகுதிக்குள் இருந்த தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட 267 ரேஷன் அட்டைதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான ரேஷன் கடையை 500 பிளாட் பகுதியிலேயே அமைத்து தர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் திறப்பு விழா கீழக்கரை நகர்மன்ற துணைதலைவர் ஹமீதுசுல்தான், நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது, தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைதலைவர் மஹசூக் பானு முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் SDPI தொகுதி தலைவர் அப்துல்வஹாப்,நகர் செயலாளர் காதர்,தினமல்லி சித்தீக்,நிஸ்டார் அலி,நியாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிஷா பவுண்டேஷன் நகர் தலைவர் பாரூக் ராஜா முகம்மது நன்றி கூறினார்.
ஜஹாங்கீர்
நிருபர்
கீழக்கரை தாலுகா.