ராமநாதபுரம் ஜன, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி ஆயிஷத் ருக்ஸானா மாவட்ட அளவில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய அளவில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பாக மாணவ பிரதிநிதியாக இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு பெற்றார். இவர் கீழக்கரையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் படித்த முன்னாள் மாணவியாவார்.
நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் அதைத்தொடர்ந்து இந்திய பாராளுமன்ற வளாகத்தில் பேசுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதோடு பிரதமர் மோடி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பையொட்டி மத்திய அமைச்சர் முருகன் மணவியை அழைத்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக தேசிய அளவில் தேர்வாகி பாராளுமன்ற வளாகத்தில் பேசுவதற்கு வாய்ப்பை பெற்ற மாணவி ஆயிஷத் ருக்ஸானா என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.