சென்னை ஜன, 19
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் வெயிட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்குமுறையை அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்ல உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். இதில் டிஎன்பிசி போன்று டிஆர்பியிலும் இனி வெயிட் ஏஜ் முறை அமல்படுத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது.