சென்னை ஜன, 14
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17 ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு வழங்குகிறது.