சென்னை ஜன, 17
அஜித் நடிப்பில் வெளியான துணிவு விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த போனி கபூர் ட்விட்டரில் துணிவு படத்தின் ப்ரோமோ வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் நெட்ஃப்லிக்ஸ் டேக் செய்துள்ளார். இதன் மூலம் துணிவு படம் விரைவில் பிரபல ஓடிடி தளமான netflixல் வெளியாகும் என்பது உறுதியாக உள்ளது. இந்த வருடம் பல பெரிய படங்களை Netflix வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.