அமெரிக்கா ஜன, 17
கலிபோர்னியாவில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். 6 மாத குழந்தையும் ஒன்று. ஆயுதம் ஏந்திய இருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட செயல் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் போதைப் பொருள் மாஃபியாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.