உக்ரைன் ஜன, 17
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெறுகிறது. இதுவரை 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன 40 பேரை காணவில்லை என உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.