மதுரை ஜன, 17
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டு உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டைக் காணஅமைச்சர்கள் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சோழவந்தான், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.