ராமநாதபுரம் ஜன, 17
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை பாசன கண்வாய் பகுதிகளில் மட்டும் வைகை தண்ணீர் வரவால் பயிர்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது. விளைந்த நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த ஆண்டு 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக 70 தொடங்கப்பட்டுள்ளது.