கோயம்புத்தூர் ஜன, 16
பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா இம்முறை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்றார்.