கோவை ஜன, 14
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். கோலமிட்டு பொங்கல் வைத்தும் பின்னர் உறியடி, கயிறு இழுத்தல் என விளையாட்டுப் போட்டிகளுடன் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.