சென்னை ஜன, 16
தமிழக அரசின் 2023 ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது 2022 ம் ஆண்டுக்கான தமிழ் துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதில் தி.க.துணை தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது, முனைவர் ஆ.ரா வெங்கடாசலபதிக்கு மகாகவி பாரதியார் விருது, திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.