கள்ளக்குறிச்சி ஜன, 12
திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருக்கோவிலூர் காவல் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து வந்த காவல்துறையினரை அவர் பாராட்டினார். தொடர்ந்து மணலூர்பேட்டை காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பை பார்வையிட்டார். பின்னர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் பாபு, துணை ஆய்வாளர் சிவச்சந்திரன், ராஜசேகரன், பழனிச்சாமி, செந்தில்வாசன் மற்றும் காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.