கீழக்கரை ஜன, 11
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டியின் முதலாவது நிர்வாக குழு கூட்டம் அவைத்தலைவர் ரத்தின முகம்மது ஹாஜியார் தலைமையில் மின்ஹாஜ்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மின்ஹாஜ் பள்ளி இமாம் மௌலவி நிஸ்தார் ஆலிம் கிராஅத் ஓதினார். வெல்ஃபேர் கமிட்டியின் செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வரவேற்புரையாற்றி நடைமுறை திட்டங்கள் எதிர்கால திட்டங்களை வாசித்தார்.
மேலும் வெல்ஃபேர் கமிட்டி தலைவர் ஹாஜி சாகுல்ஹமீது ஆலிம் அறிமுக உரையாற்றினார். மற்றொரு அவைத்தலைவர் ஹாஜி பானா ஆனா சேகு அபுபக்கர் சாஹிப்,துணைத்தலைவர்களான ஹாஜி உமர் அப்துல்காதர் களஞ்சியம்,ஹாஜி செய்யது அபுதாஹிர், ஜனாப் ஹபீப் முகம்மது தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நல்லபல ஆலோசனைகளை கூறினர்.
வெல்ஃபேர் கமிட்டி பொருளாளர் ஷஃபீக் ஹாஜியார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் ஆருஸி
தாலுகா நிருபர்.
கீழக்கரை.