கீழக்கரை ஜன, 9
ராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை பிரதான சாலைகளில் வாறுகால் மூடிகள் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும் அதில் ஹைராத்துல் ஜலாலியா துவக்கப்பள்ளி அருகில் உள்ளவை மிகவும் ஆபத்தானதென்று கடந்த 24.12.2022 தேதியிட்ட வணக்கம் பாரதம் இதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக தற்போது அந்தப்பகுதியில் வாறுகால் மூடி சரி செய்யப்பட்டு மக்களின் அச்சம் போக்கப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து அந்தப்பகுதி மக்கள் நமது வணக்கம் பாரதம் இதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதைப்போன்று மற்ற சாலைகளிலும் பாதுகாப்பான வாறுகால் மூடி போட வேண்டும் என்பதும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீர்படுத்த வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்று நாமும் வணக்கம் பாரதம் இதழ் சார்பாக நம்பிக்கை தெரிவிப்போம்.
ஜஹாங்கீர்
நிருபர்.
கீழக்கரை தாலுகா.